வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (10:59 IST)

இதனால்தான் கைவிடப்படுகிறதா விஜய்-முருகதாஸ் கூட்டணி படம்?

‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வந்தது. முருகதாஸும் அகிரா, ஸ்பைடர் தோல்வியால் அடுத்தப்படம் ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்று காத்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரு தகவல் வந்துள்ளது, முருகதாஸ் அடுத்து அக்ஷய்குமார் நடிக்கும் ஒரு  படத்தை இயக்கவுள்ளாராம். இப்படம் மில்லியன் டாலர் பேபி ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என கூறப்பட்டுள்ளது.  புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் க்ளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் மில்லியன் டாலர் பேபி.
2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யவிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படம் 30 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. ஆனால், 216.8 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இப்படம்  பாக்ஸிங்கை மையமாக கொண்டது. இப்ப்டத்தில் அக்ஷய்குமார், ஹிந்தி பிக்பாஸ் புகழ் மரினா குவார் ஆகியோர்  நடிக்கவுள்ளனர், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகின்றது.
 
இதனால் தற்போது விஜய் படத்தை முருகதாஸ் அடுத்து இயக்குவரா? இல்லை, அக்ஷய் குமார் படத்திற்கு சென்றுவிடுவாரா?  என்ற சந்தேகம் உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
 
மில்லியன் டாலர் பேபி சிறந்த படம், சிறந்த இயக்குநர் (ஈஸ்ட்வுட்), சிறந்த நடிகை (ஹிலாரி ஸ்வாங்), சிறந்த உறுதுணை நடிகர்  (மார்கன் ஃப்ரீமேன்) ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.