செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (12:28 IST)

கருணாநிதி குறித்து சர்ச்சை பேச்சு.! கைதாகிறாரா சீமான்.?

Seeman
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் புகார் அளித்துள்ளார்.
 
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது குளித்து பேசிய சீமான்,  மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்திருந்தார்.  கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி,  சதிகாரன் கருணாநிதி என நான் பாடுகிறேன்,  முடிந்தால் என் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள் என்று சீமான் தெரிவித்திருந்தார்.
 
மேலும் தமிழகத்தில் தீய அரசியலை தொடங்கியதே கலைஞர் தான் எனவும், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் விளைவித்ததை யாராலும் மறந்து விட முடியாது என விமர்சித்திருந்தார்.  அவரது பேச்சுக்கு திமுகவினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

 
இந்நிலையில் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் புகார் அளித்துள்ளார்.