வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 22 ஜூன் 2022 (07:34 IST)

சென்னையில் 3வது நாளாக இரவில் வெளுத்து வாங்கிய மழை!

rain
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இரவில் மழை பெய்த நிலையில் நேற்று மூன்றாவது நாளாகவும் இரவில் மழை பெய்ததால் சென்னை முழுவதும் தற்போது குளிர்ச்சியான தட்ப வெட்பம் காணப்படுகிறது. 
 
கடந்த சில மாதங்களாக வெயிலின் வெப்பம் காரணமாக சென்னை மக்கள் தத்தளித்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் சென்னையில் குளிர்ச்சியான தட்ப வெட்பம் தற்போது இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
நேற்று மாலை தொடங்கி விடிய விடிய சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை தியாகராய நகர் கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுரங்க பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதாகவும்,ஒரு சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மழையால் ஏற்பட்ட பாதிப்பின் மீட்புப் பணியை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது