3500 லேப்டாப்புகளுடன் சென்ற கண்டெய்னர் திடீர் மாயம்: சென்னை அருகே துணிகரம்
சென்னை அருகேயுள்ள டெல் (DELL) என்ற நிறுவனம் தயாரித்த 3500 லேப்டாப்புகள் ஒரு கண்டெய்னரில் வைக்கப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் லேப்டாப்புகள் உள்ள கண்டெய்னர் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மகாவீர் என்ற நிறுவனத்தின் கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட லேப்டாப்களை கரசங்கால் - சொரப்பனஞ்சேரி என்ற பகுதியில் வழிமறித்த ஒரு மர்ம கும்பல் டிரைவரை கீழே இறக்கிவிட்டு கண்டெய்னரை கடத்திவிட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து டிரைவர் கொடுத்த தகவலின்பேரில் மணிமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட போலிசார் பழநி என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 209 லேப்டாப்புகளை பறிமுதல் செய்தனர். மீதியுள்ள மூவாயிரத்திற்கும் மேற்பட்ட லேப்டாப்புகள் மற்றும் கண்டெய்னரை தேடும் பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.