1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 17 மே 2017 (19:37 IST)

ஏலியனை இந்தியாவில் அறிமுகம் செய்தது டெல் நிறுவனம்

டெல் நிறுவனம் கேமிங்-யில் சிறந்த ஏலியன்வேர் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.


 

 
பெரும்பாலான கேமிங் பிரியர்கள் பயன்படுத்தக்கூடிய கணினி ஏலியன்வேர். கேமிங்க்காக சிறப்பாக தயரிக்கப்பட்ட இந்த ஏலியன்வேர் லேப்டாப்களை டெல் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
 
ஏலியன்வேர் 15, ஏலியன்வேர் 17, ஏலியன்வேர் ஔரா டெஸ்க்டாப், இன்ஸ்பிரான் 15 5000 கேமிங், இன்ஸ்பிரான் 17 5000 கேமிங் போன்ற மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
 
ஸ்மாட்ர்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், நல்ல கிராஃபிக்ஸ் கொண்ட கேமிங் விளையாட்டுகள் புதிது புதிதாக வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் டெல் நிறுவனம் கேமிங் என்றே வடிவமைக்கப்பட்ட ஏலியன்வேர் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
 
இந்திய கேமிங் கணினி சாதனங்கள் சந்தையில் இந்த ஏலியன்வேர்களுக்கு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.