ஒரே ஒரு கேரிபேக்கின் விலை ரூ.8 ஆயிரம்! நம்ப முடிகிறதா?
கடைகளில் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கேரிபேக்கில் போட்டு கொடுக்கும் வணிகர்கள் மத்தியில் கேரி பேக்கிற்கு காசு வாங்கிய வணிக நிறுவனம் ஒன்றுக்கு நீதிமன்றம் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
பத்து ரூபாய்க்கு வாழைப்பழம் வாங்கினால் கூட கேரிபேக்கில் போட்டுக்கொடுக்கும் பிளாட்பார கடைகள் இருக்கும் நிலையில் பெரிய வணிக நிறுவனங்கள் சில, வாடிக்கையாளர்களிடம் கேரிபேக்கிற்கு பணம் வாங்கும் வழக்கத்தை கொண்டுள்ளன.
இந்த நிலையில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.821-க்கு பொருள் வாங்கிய நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், முத்துக்கிருஷ்ணன் என்பவரிடம் ரூ.6 கேரி பேக்கிற்கு பணம் வாங்கியுள்ளது.
இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. கடை விளம்பரம் போட்ட கேரிபேக்கிற்கு பணமும் பெற்ற வணிக நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.8000 வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்