புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 16 ஆகஸ்ட் 2017 (14:34 IST)

தயாரிப்பாளர் சங்கத்தை மதிக்காத வேலைக்காரன் படத்துக்கு ரூ.1 கோடி அபராதம்

தயாரிப்பாளர் சங்கத்தின் விதியை மீறி வேலைக்காரன் படத்துக்கு நாளிதழ்களில் வெளியான விளம்பரம் தொடர்பாக, தாயாரிப்பாளர் சங்கம் ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது.


 

 
கடந்த 14ஆம் தேதி நாளிதழ்களில் ‘வேலைக்காரன்’ படத்தின் விளம்பரம் முழுப்பக்கத்திற்கு வெளியாகியிருக்கிறது. தாயாரிப்பாளர் சங்க விதிப்படி கால் பக்கத்துக்கு மேல் எந்த படத்துக்கும் விளம்பரம் கொடுக்கக் கூடாது. ஆனால், அதையும் மீறி முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் சார்ப்பில் எதுவும் தெரிவிகப்படாமல் இருந்தது.
 
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் விதியை மீறியதற்காக படத் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விஜய் டிவிக்கும் தயாரிப்பாளர் சங்கம் சார்ப்பில் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.