செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (11:22 IST)

தனுஷுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்

தனுஷின் கேரவனுக்கு திருட்டுத்தனமாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால், மின்வாரிய அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

 
 
தனுஷின் குலதெய்வ கோயில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே முத்துங்காபுரம் என்ற ஊரில் உள்ளது. ‘தங்களுடைய மகன் தனுஷ்’ என கதிரேசன் – மீனாட்சி தம்பதி தொடுத்த வழக்கில் இருந்து விடுபட்டதால், நேர்த்திக்கடனை  செலுத்துவதற்காக நேற்று முன்தினம் சென்றிருந்தனர். தனுஷுடன் மனைவி ஐஸ்வர்யா, பெற்றோர்கள் கஸ்தூரி ராஜா –  விஜயலட்சுமி ஆகியோரும் சென்றிருந்தனர்.
 
அங்கு, அவர்கள் பயன்படுத்துவதற்காக கேரவன் கொண்டு வரப்பட்டிருந்தது. அதில் ஓய்வெடுத்த தனுஷ், யாருடனும் பேசாமல் காரில் கிளம்பிச் சென்றுவிட்டார். அந்த கேரவனுக்கான மின்சாரம், அருகிலிருந்த ஊராட்சி தெருவிளக்குக்கான மின்பெட்டியில் இருந்து திருட்டுத்தனமாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இது மின்வாரிய அதிகாரிகளுக்குத் தெரியவர, டிரைவர்  வீரப்பனுக்கு 15, 731 ரூபாய் அபராதம் விதித்தனர். அதைச் செலுத்திய பின்னர் கேரவன் விடுவிக்கப்பட்டது.