திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2024 (13:33 IST)

மோடியின் குடும்பம் என்பது இந்திய மக்கள் அல்ல. அம்பானியும் ,அதானியும் தான் செல்வப் பெருந்தகை கருத்து

குமரி மாவட்டத்தில் கட்சியினர் சந்திப்பு நிகழ்விற்கு வருகை வந்துள்ள, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை.
 
கன்னியாகுமரியில் அமைந்துள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி, மற்றும் பெருந் தலைவர் காமராஜர் நினைவு மண்டபங்கள் மற்றும் ,ராஜூவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி மரியாதை செலுத்தினார்
 
இதனை தொடர்ந்து அகஸ்தீஸ்வரத்தில் உள்ள குமரி முன்னாள் மக்களவை உறுப்பினராக இருந்த வசந்த குமரியின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து , மலர் தூவி மரியாதை செலுத்தினார்
 
இந்த நிகழ்வில் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், தேசிய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், வட்டார தலைவர் கே.டி.உதயம் உட்பட காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் பங்கேற்றனர்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வ பெருந்தகை :
 
தமிழகத்திற்கு நான்கு முறை அதுவும் கடுமையான மழையால் பாதிக்கப்பட்ட. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்கவில்லை, தொடர்ந்து வந்தால் தமிழக மக்கள் ஏமாந்து பாஜகவிற்கு வாக்களித்து விடுவார்கள் என மோடி நம்புகிறார்.
 
பாஜக முதலில் வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இருப்பவர்கள், நாங்கள் தேர்தலில் நிற்க மாட்டோம் என ஓடுகின்றனர்.
 
மோடியின் குடும்பம் என்பது இந்திய மக்கள் அல்ல. அம்பானியும் ,அதானியும் தான் மோடியின் குடும்பம் 
 
தமிழக மக்களின்,திமுக கூட்டணி கட்சிகளின் மன சாட்சியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.
 
தமிழகம், புதுவையும் எங்கள் காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிகள் தான். கூட்டணி பேச்சு வார்த்தை சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது என  கூறினார்.