வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (15:05 IST)

3 தொகுதிகளை கேட்டு விசிக பிடிவாதம்..! திமுகவுடன் நாளை 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை..!!

Stalin Thiruma
தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம், கூட்டணி பேச்சுவார்த்தைகள் காரணமாக பரபரப்பாக காணப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்களின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திமுகவை பொறுத்தவரை, ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 
 
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, 3 தொகுதிகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
 
கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த முறை கூடுதலாக ஒரு பொதுத் தொகுதியை கேட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகியவற்றில் ஏதாவது ஒரு பொதுத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று ஏற்கனவே நடைபெற்ற முதல்கட்ட பேச்சு வார்த்தையில் விசிக வலியுறுத்தியது.
 
இந்நிலையில்  திமுக – விசிக இடையே நாளை மீண்டும் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.  அப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.