செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : திங்கள், 14 மார்ச் 2016 (16:48 IST)

காணாமல் போன இளம்பெண் கற்பழித்து வெட்டி கொலை: காமவெறி பிடித்த டிரைவர் வாக்குமூலம்

காணாமல் போன இளம்பெண் கற்பழித்து வெட்டி கொலை: காமவெறி பிடித்த டிரைவர் வாக்குமூலம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போனதாக கருதப்பட்ட இளம் பெண்ணை ஆட்டோ டிரைவர், கற்பழித்து கொடூரமாக கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
கன்னியாகுமரி, தளவாய்புரம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன். தன்னுடைய மனைவி ராஜீ காணவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு நேசமணி நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 
 
இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தளவாய்புரம் பகுதி ஆட்டோ டிரைவராக இருக்கும் செல்வம் என்பவரின் ஆட்டோவில் காணாமல் போன நாளன்று ராஜீ சென்றது தெரியவந்தது. 
 
இதனைதொடர்ந்து, செல்வத்தை தேடி போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது, போலீசார் தேடுவதை தெரிந்துகொண்ட செல்வம், தலைமறைவாக இருந்து வந்துள்ளார், இதையடுத்து, நேற்று அவரை கைது செய்தனர், பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜீவை கடத்தி சென்று அஞ்சுகிராமம் அருகே கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், அந்த பெண்ணின் உடலை அப்பகுதியில் உள்ள முள் புதரில் புதைத்துள்ளார்.
 
இதை தொடர்ந்து,  இன்று காலை போலீசார் ஆட்டோ டிரைவரை அழைத்துக் கொண்டு பிணத்தை புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்றனர். தற்போது, பிணத்தை தோண்டி எடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.