திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 4 அக்டோபர் 2021 (18:07 IST)

நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

லக்கிம்பூர் விவகாரத்தில் பிரதமர், உ.பி.முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரி நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் என அறிவிப்பு. 
 
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி  நேற்றிரவு விமானத்தில் சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் லக்கிம்பூர் மாவட்டம் சென்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்நிலையில் லக்கிம்பூர் வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்தும், சம்பவ இடத்துக்குச் செல்ல முயன்ற பிரியங்கா காந்தி கைது செய்யட்டிருப்பதை கண்டித்தும் நாளை நாடு முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்கள் முன்பாக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.