1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. congress mla speech about kamarajar rule

இப்போதைக்கு திமுக கூட்டணி.. எதிர்காலத்தில் காமராஜர் ஆட்சி: காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சு..!

திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது என்பதும் இரு கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இப்போதைக்கு திமுக கூட்டணி ஆனால் எதிர்காலத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என காங்கிரஸ் எம்எல்ஏ பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் செல்வப்பெருந்தகை உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ் பேசுகையில் ’கன்னியாகுமரி காங்கிரஸ் கோட்டை, அதை காப்பாற்ற வேண்டும், காமராஜர் ஆட்சிக்கு பிறகு 50 ஆண்டுகளுக்கு மேலாக நாம் மாற்றுக் கட்சியுடன் தான் கூட்டணி வைத்து போட்டியிட்டு வருகிறோம், எனவே நம்மிடம் அதிகாரம் இல்லை

இப்போதைக்கு திமுக கூட்டணியில் இருந்தாலும் எதிர்காலத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும், இதுதான் நமது கொள்கையாக இருக்க வேண்டும் என்று பேசி உள்ளார்

ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்க திட்டமிட்டுள்ள நிலையில் திமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்யும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏ இவ்வாறு பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ராகுல் காந்தி ஆணவம் இன்னும் மாறவே இல்லை.. ஸ்மிருதி இரானி ஆவேசம்..!