டவுன் ஆன பேஸ்புக், இன்ஸ்டாகிராம்.. கிண்டல் பதிவு செய்த எலான் மஸ்க்..!
நேற்று இரவு திடீரென உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் டவுன் ஆகியதை எடுத்து அதன் கோடிக்கணக்கான பயனாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்./ இது குறித்து கேலியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தனது சமூக வலைதளத்தில் செய்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஏராளமான பயனாளர்களை கொண்டு உள்ளது என்பதும் தினமும் கோடிக்கணக்கானோர் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென நேற்று இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் வேலை செய்யவில்லை என்று பலர் புகார் அளித்தனர்/ ஒரு சிலர் தங்களுடைய அக்கவுண்ட் தானாகவே லாக் அவுட் ஆகிவிட்டது என்றும் மீண்டும் லாகின் செய்ய முடியவில்லை என்றும் கூறினர்.
ஆனால் அதே நேரத்தில் ட்விட்டர் எப்போதும் போல் இயங்கி வந்ததை அடுத்து அதில் தான் பயனாளிகள் தங்கள் குறைகளை பதிவு செய்தனர். இந்நிலையில் இது குறித்து எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக ஒரு மீம் பதிவு செய்துள்ளார்.
அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை ஒரு பக்கமும் ட்விட்டரை ஒரு பக்கமும் பதிவு செய்து ட்விட்டர் அட்டகாசமாக வேலை செய்து வருகிறது என்று கிண்டலுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த மீம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Edited by Siva