விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு: கூட்டணி உறுதியாகிறதா?
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை, காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி சென்னையில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்தாலும், கட்சியின் ஒரு பிரிவினர் தவெகவுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கரூர் சம்பவத்தின்போது ராகுல் காந்தி, விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய நிலையில், தற்போது அவரது நம்பிக்கைக்குரிய நிர்வாகி நேரடியாக சந்தித்திருப்பது காங்கிரஸ் - தவெக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையின் ஆரம்பமாக இருக்கலாம் என்ற யூகங்களை வலுப்படுத்தியுள்ளது. இந்த நகர்வு தமிழக அரசியல் களத்தின் வியூகங்களை மாற்றியமைக்கலாம்.
Edited by Mahendran