திங்கள், 26 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (17:54 IST)

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த பிரபல நடிகை

vijayashanthi in congress
தெலுங்கானா மாநிலத்தில வரவுள்ள சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், நடிகை விஜயசாந்தி இன்று காங்கிரஸில் இணைந்தார்.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.இம்மாநிலத்தில் அடுத்த மாதம் 30 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில்,  விரைவில் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத காரணத்தால்  முன்னாள் எம்பி,., விஜயசாந்தி காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது.

மேலும், ‘பாரதிய ராஷ்டிரிய சமிதியிடம் இருந்து தெலங்கானா மக்களை காங்கிரஸ் தான் காப்பாற்ற வேண்டும்’ என சமீபத்தில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான விஜயசாந்தி இன்று அக்கட்சியில் இருந்து விலகி இன்று மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில்  காங்கிரஸ் இணைந்தார்.

இதுகுறித்து புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.