ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2023 (13:47 IST)

''சிறைக்குள் அவர்....சிறைக்கு வெளியே நான்''- சூர்யா பட இயக்குனர்

ram gobal varma
இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர்,  சிவா, ஷானா ஷானம், ரங்கீலா, சூர்யா மற்றும் விவேக் ஓபராய், பிரியாமணி நடிப்பில் வெளியான ரத்த சரித்திர ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், பல அதிரடி அறிவிப்புகள், சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறி வரும் இயக்குனர் ராம்கோபால் வர்மா, இன்று தன் வலைதள பக்கத்தில், ராஜமன்தி மத்திய சிறைக்கு முன்பு செல்பி எடுத்து அதை பகிர்ந்துள்ளார்.  இதில்,  செல்ஃபி வித் ராஜமந்தி மத்திய ஜெயில்...சிறைக்குள் அவர்...சிறைக்கு வெளியே நான் என்று குறிப்பிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரம் மாநிலம் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.