1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 25 அக்டோபர் 2023 (10:53 IST)

அரசியலுக்கு வருகிறாரா விஜய்? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பா?

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் வட்டாரங்கள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக இரவு நேர பாடசாலை, மாணவர்களுக்கு கல்வி விருது, விலையில்லா உணவகம், குருதியகம், வழக்கறிஞர் அணி, மகளிர் அணி என படிப்படியாக விஜய் மக்கள் இயக்கத்தின் ஒவ்வொரு அணிகளாக தொடங்கப்பட்டு வருகிறது. 
 
விரைவில் விஜய் மக்கள் இயக்கத்தின் தொழிலாளர் அணி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை விஜய் அரசியலுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக விஜய் மக்கள் இயக்கத்தின்  வட்டாரங்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த அறிவிப்பு வெளியானால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran