வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 31 ஜனவரி 2024 (08:08 IST)

மம்தாவை கன்னத்தில் அறையுங்கள் .. மேற்குவங்க பாஜக தலைவர் பேச்சால் பரபரப்பு..!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கன்னத்தில் அறையுங்கள் என பாஜக  தலைவர்  பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

பாஜக பிரமுகர் சுகந்தா என்பவர் நேற்று கூட்டம் ஒன்றில் பேசியபோது ’உங்கள் பிள்ளைகள் பள்ளியில் இருந்து திரும்பி வரும்போது பாடம் தொடர்பாக அவர்களால் எதற்கும் பதில் சொல்ல முடியாது. அவர்களை நீங்கள் கன்னத்தில் அறைந்து பள்ளியில் என்ன படித்தீர்கள் என்று கேள்வி கேட்பீர்கள். அதுபோல் மம்தா பானர்ஜியை கன்னத்தில் அறையுங்கள், அவர் தான் மொத்த கல்வி சிஸ்டத்தை அழித்துவிட்டார் என்று பேசியிருந்தார்

இந்த பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு பெண் என்றும் பாராமல் உடல் ரீதியான வன்முறை அழைப்பு விடுத்திருக்கும் பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜகவின் அழிவையை இது காட்டுகிறது என்றும் ஆணாதிக்க தலைவர் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.


பாஜக தலைமை இதுவரை இந்த நிகழ்வுக்கு எந்த விதமான ரியாக்ஷனும் இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva