ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 ஏப்ரல் 2018 (21:23 IST)

திமுக கூட்டணியை காங்கிரஸ் கைகழுவுமா?

காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் பிரச்சனை இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க காங்கிரஸின் அவசர செயற்குழு கூட்டம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக காங்கிரச் கட்சி வரும் 7 ஆம் தேதி அவசர செயற்குழு கூடுகிறது. தற்போது உள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில், இந்த அவசர செயற்குழு செயல் தலைவருக்கு எதிராக இருக்குமோ என அனைவரின் கவனம் இதன் பக்கம் திரும்பியுள்ளது. 
 
2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில், காங்கிரஸுக்கு குறைந்த இடங்களை ஒதுக்கவுள்ளதாக திமுக சார்பில் பேசப்பட்டதாம். அதுவும் ஒற்றை இலக்கக்கத்தில் இடம் ஒதுக்கப்படவுள்ளதாம்.
 
ஒதுக்கப்படும் இடங்களிலும் காங்கிரச் போட்டியாளர்கள் திமுக சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமாம். இவ்வாறு செய்திகள் வெளியாக இதற்கு செயல் தலைவரும் ஒப்புதல் அளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளாராம். 
 
இதனால், காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து இந்த செயற்குழுவில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. 
 
காங்கிரஸ் கட்சியின் தலைமை, முதல் தர நிர்வாகிகள் பெரிதாக எதும் பேசவில்லை என்றாலும், இரண்டாம் மூன்றாம் தர நிர்வாகிகள் கடும் கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.