1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (18:01 IST)

அமமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி: கே.எஸ்.அழகிரி பதிலால் திமுக அதிர்ச்சி!

alagiri
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருப்பது திமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
வரும் 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றே கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் இந்த முறை அதிக சீட்டுகளை கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஒற்றை இலக்கங்களில் மட்டுமே காங்கிரஸ்க்கு திமுக இடத்தை ஒதுக்கும் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் தாங்கள் எதிர்பார்க்கும் சீட்டுகள் கிடைக்காவிட்டால் காங்கிரஸ் தலைமையில் புத்ய கூட்டணி அமையும் என்று கூறப்பட்டது. குறிப்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து ஒரு புதிய கூட்டணியை காங்கிரஸ் அமைக்கும் என்று கூறப்பட்டது 
 
இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே எஸ் அழகிரி அமமுக உடன் காங்கிரஸ் அணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் ஆலோசிக்கப்படும்  என்று தெரிவித்துள்ளார். இதனால் திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.