நகையை ஒப்படைத்த ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!
சமீபத்தில் சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணி தனது 60 கிராம் தங்க நகையை தொலைத்துவிட்டார்.
இதையடுத்து, இந்த நகையைப் பார்த்த அப்பேருந்தின் ஓட்டுநர் குணசீலன் மற்றும் நடத்துனர் குணசேகரன் ஆகிய இருவரும் இதை காவல்துறை மூலம் தங்க நகையைத் தொலைத்தவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க உதவினர்.
இதையடுத்து தங்க நகையை போலீஸ் மூலம் உரியவர்களிடம் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.