ஞாயிறு, 30 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 மார்ச் 2025 (08:42 IST)

பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள ஒரு நிபந்தனை மட்டும் விதியுங்கள்.. ஈபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு அறிவுரை

thangam thennarasu
நீட் தேர்வை ரத்து செய்தால் பாஜகவுடன் கூட்டணி என்ற ஒரு நிபந்தனையை மட்டும் விதியுங்கள்  என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் ‘நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ என்று மாண்புமிகு கழகத்தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை திரு. ராகுல் காந்தி அவர்களையும் அளிக்கச் செய்திருந்தார். 
 
டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று ‘பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை’ என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களைச் சந்தித்த திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களே!
 
பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்று கூடச் சொல்லியிருக்கிறார். 
தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா?
 
Edited by Siva