1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (18:27 IST)

வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம்.. க்யூஆர் கோட் அறிமுகம் செய்த தஞ்சை மேயர்..!

மாநகராட்சி சம்பந்தப்பட்ட எந்த புகாரையும் வீட்டிலிருந்து கொடுக்கலாம் என்றும் அதற்கான க்யூ ஆர் கோடு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தஞ்சாவூர் மேயர் தெரிவித்துள்ளார்.
 
தஞ்சாவூரில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் குடிநீர் பிரச்சனை குப்பை அல்லாமல் இருக்கும் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க இனி மாநகராட்சி அலுவலகம் வர தேவை இல்லை என்றும் க்யூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த புதிய வசதியை தஞ்சை மேயர் ராமநாதன் இன்று அறிமுகப்படுத்தினார். தஞ்சாவூரில் உள்ள 51 வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஒரு மாதத்திற்குள் இந்த கியூ ஆர் ஸ்டிக்கர் ஒட்டி முடிக்கப்படும் என்றும் வீட்டில் வாசிப்பவர்களின் பெயர் முகவரி தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யப்படும் என்றும் அவர்கள் வீட்டில் இருந்தபடியே மொபைல் கேமராவில் க்யூகோடு ஸ்கேன் செய்து சொத்து வரி வீட்டு வரி உள்ளிட்ட வரிகளையும் செலுத்தலாம்  என்றும் புகார் செய்த சில மணி நேரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran