வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (11:41 IST)

பாஜக எங்கிருக்கிறதோ அங்கு நாங்கள் இருக்க மாட்டோம்.! திமுகவை எச்சரித்த கம்யூனிஸ்ட்..!

MK Stalin
பாஜக எங்கே இருக்கிறதோ, அங்கு நாங்கள் இருக்க மாட்டோம் என கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளது திமுகவுக்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது

கவர்னரின் தேநீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அறிவித்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த விருந்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் கலைஞர் கருணாநிதி நாணய அறிமுக விழாவில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டதும் திமுக பாஜக இடையே மறைமுக உறவு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியும் இது குறித்து விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் இருப்பதற்கு முதல் காரணமே திமுக, பாஜகவை எதிர்க்கிறது என்பதற்காக தான். இந்த நிலையில் திமுக தனது நிலையில் இருந்து மாறுபட்டால் கூட்டணி கட்சிகள் வெளியேற தயாராகும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழக மக்களை புறந்தள்ளுதல் என்ற மாறாத அரசியல் குணம் கொண்ட பாஜகவோடு திமுக இணக்கமாக செல்லும் நிலை இப்போதைக்கு இல்லை. அதற்கான சூழலும் இல்லை. ஒருவேளை திமுக - பாஜக கூட்டணி வந்தால் பாஜகவோடு யார் சேர்ந்தாலும் அந்த அணியை எதிர்க்கிற அணியில்தான் நாங்கள் இருப்போம்’ என கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Edited by Mahendran