1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (17:39 IST)

மம்தாவை விமர்சித்தால் விரல்கள் உடைக்கப்படும்: மே.வங்க அமைச்சர் பேச்சுக்கு பாஜக கண்டனம்..!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்து எழுதும் விரல்கள் உடைக்கப்படும் என மேற்கு வங்க அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் மம்தவை மருத்துவர்கள் உள்பட பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக இறந்த மாணவியின் பெற்றோர் முதல்வர் மம்தா பானர்ஜி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக இந்திரா காந்தி போல் மம்தா பானர்ஜியை சுட்டு கொலை செய்வோம் என்று பதிவு செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மருத்துவர் மரண சம்பவத்தில் முதல்வர் மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுபவர்கள், சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து எழுதுபவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என்றும் இல்லை என்றால் இது போன்ற நபர்கள் மேற்குவங்கத்தை வங்கதேசமாக மாற்றி விடுவார்கள் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் உதயன் குஹா என்பவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அவருடைய பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran