1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (16:30 IST)

மகனுக்கு பதவி வழங்கும் முதல்வர் மக்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.! திருமதி பிரேமலதா விமர்சனம்.!!

Premalatha
மகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க யோசிக்கும் முதல்வர் மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் அவர் கலந்து கொண்டு தேமுதிக சார்பில் ஆதரவு தெரிவித்தார்.  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,   மின்வாரிய ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை முதல்வர்  நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்தலுக்கு முன்பு திமுக ஒரு நிலைப்பாட்டில் உள்ளது என்றும் தேர்தலுக்குப் பின்பு ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாட்டில் உள்ளது என்றும் அவர் விமர்சித்தார். 

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று ஒட்டுமொத்த கேங்மேன் தொழிலாளர்கள் சார்பாக முதல்வருக்கு இந்த கேள்வி எழுப்புகிறேன் என்று குறிப்பிட்ட பிரேமலதா,  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றதால்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். இவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் ஒருபக்கம், மருத்துவர்கள் ஒருபக்கம், செவிலியர்கள் ஒரு பக்கம் என எல்லா துறையிலும் தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்று அவர் கூறினார். 

 
இன்று 100 ரூபாய் காயின் வெளியீட்டிற்கும், மகனை துணை முதல்வர் ஆக்கலாம் என்பதிலும் யோசித்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.