1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Communist finalise alliance with DMK for election

திமுக - மார்க்சிஸ்ட் இழுபறியில் வி(மு)டிவு வந்தது!!

தொகுதிப்பங்கீடு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. 

 
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதில், கடந்த சில நாட்களாக திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. 
 
திமுக தரப்பில் இருந்து ஆறு தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறியதாகவும் ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8 தொகுதிகள் கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்த கூட்டணி இழுபறியில் இருந்தது. 
 
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11 மணிக்கு தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக - மார்க்சிஸ்ட் கையெழுத்துயிட உள்ளது. 
About Writer
Sugapriya Prakash