1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. college teacher job application last date

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் எது? முக்கிய அறிவிப்பு..!

teachers
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்வியியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க சமீபத்தில் அறிவிப்பு வெளியான நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மே 15ஆம் தேதி மாலை 5 மணி உடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நாள் முடிவடைந்ததால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இன்று மாலைக்குள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறும் அதே போல் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினால் 19ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது

ஏற்கனவே தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள் மட்டுமே விண்ணப்பத்தை திருத்தம் செய்ய முடியும் என்றும் விண்ணப்பதாரர்கள் திருத்தம் செய்து புதுப்பித்தவுடன் கடைசி பக்கத்தில் உள்ள சமர்ப்பி என்ற பட்டனை அழுத்தி மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஒரு முறை விண்ணப்பம் மாற்றம் செய்து சமர்ப்பித்த பிறகு அதன் பிறகு எந்த விதமான மாற்றமும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கட்டுமான நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு..! தமிழக அரசின் முடிவில் திடீர் மாற்றம்..!