வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 மே 2024 (14:48 IST)

கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்க சென்ற மாணவர் விபத்தில் பலி.. கதறி அழுத பெற்றோர்..!

Accident
பிளஸ் 2 முடித்த மாணவர் கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்க சென்றபோது ரயிலில் ஏறியதாகவும் அப்போது அவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்ததாக வெளி வந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் 
 
சென்னை எண்ணூர் காமராஜர் நகரை சேர்ந்த முகமது நபில் என்ற 17 வயது மாணவர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற நிலையில் அவர் ஆவடியில் உள்ள கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பம் வாங்க சென்றார் 
 
அப்போது அவர் ஆவடி ரயிலில் எண்ணூர் ரயில் நிலையத்திலிருந்து ஏறிய போது எதிர்பாராத வகையில் திடீரென தவறி விழுந்தார். இதனை அடுத்து அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் 
 
கல்லூரிக்கு விண்ணப்பம் வாங்க சென்ற தங்களது மகன் ரயில் விபத்தில் பலியானது குறித்து கேள்விப்பட்ட அவரது பெற்றோர் கதறி அழுதது காண்போர் நெஞ்சத்தை உருக வைக்கும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் இது குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran