புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 26 அக்டோபர் 2018 (15:26 IST)

கல்லூரி மாணவர்கள் விசில்...! இளையராஜா அப்செட்...!

உலகில் உள்ள ’தி கிரேட்டஸ்ட் கம்போசர்களில் ’ஒருவர் இளையராஜா என காந்த கந்தர்வ குரலோன் கே.ஜெ.ஜேசுதாஸ் கூறினார். ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மானும் இளையராஜாவை ’சச் எ இன்ஸிபிரேசனல் ஸ்பிரிட் அவருகிட்ட இருக்கும்’  என்று புகழ்திருக்கிருக்கிறார்.

இப்படி உலகில் பலராலும் பட்டிதொட்டி எல்லாம் புகழின் வெளிச்சம் பரப்பிக்கொண்டு தன்னை இசை மேதையாய் அடையாள காட்டிவருபவர் இசைஞானி இளையராஜா.

இப்போது பல படங்களுக்கு இசையமைத்துக்கொண்டு பிஸியாளாக வலம் வகிறார். அவரது ரசிகர்களின் கிரேஸ் அது இன்னும் குறையவேயில்லை.

கோவையில் உள்ள ஒரு பிரபலமான  தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட இளையராஜா தான் ஆன்மீக அனுபவங்கள் பற்றி கூறிய போது அரங்கில் இருந்த மாணர்கள் விசில் அடித்ததால் அவர்களை கம்யூனிஸ்டுகள் என கூறினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.