திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 24 அக்டோபர் 2018 (11:14 IST)

'அரசியலில் என்ன செய்யக்கூடாது' கமலுக்கு குரு இவர்கள் தானாம்

சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவியர் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசனை நேற்று அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.
அப்போது கமல் பேசுகையில், "ஒரு சிலர் தங்கள் ஓட்டுக்களை விற்பதால், ஊழல் பாரம் நம் அனைவர் மீதும் விழுகிறது. ஓட்டை விற்பதால்  ஏற்படும் தீமை குறித்து மாணவர்களாகிய நீங்கள் தான் மற்றவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்
 
அரசியல்வாதிகள் என்னிடம் என் அரசியல் அனுபவம் குறித்து கேட்கிறார்கள் 40 வருடங்களாக என்ன செய்யக் கூடாது என்பதை கோட்டையில் இருந்தே எனக்கு கற்றுக் கொடுத்த அவர்களுக்கு எனது நன்றி என்றும் அரசியல் கட்சிகள் செய்த தவறுகளை மக்கள் நீதி  மய்யம் செய்யாது.
 
இன்றைய அரசியல் சூழ்நிலையை புரிந்துகொண்டு, எதில் தவறு என்று தோன்றுகிறதோ அதை மாற்றுவதற்கான வழிகளை நீங்கள் மேற்  கொள்ள வேண்டும்" என்றார்.