திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 25 அக்டோபர் 2018 (14:54 IST)

சொல்லப்போனால் எனக்கு நான் இளையராஜவே இல்லை

கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் 'இசைஞானியுடன்  ஒருநாள்' என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவிகள் பல்வேறு கேள்விகளை இளையராஜாவிடம் கேட்டனர்.
 
அதில் ஒரு மாணவி இதுவரை நீங்கள் இசை அமைத்த பாடல்களில் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாத பாடல் எது?''  என்று கேட்டார்.
 
அதற்கு பதில் அளித்த இளையராஜா ``இதுவரை நான் இசையமைத்ததில் எந்தப் பாடாலுமே
நான் எதிர்பார்த்தமாதிரி அமைந்ததில்லை. ஒவ்வொரு பாட்லயும் எங்கேயாவது தவறு இருக்கும். இசையில் எல்லா செல்வமும் இருக்கு. அதைச் சரியாக பயன்படுத்தணும். இசைக்கு வெற்றி, தோல்வி கிடையாது. வெற்றி, தோல்விகளை நீங்க (மாணவர்கள்) கணக்கில் எடுத்துக்க கூடாது  . மத்தவங்களுக்குத்தான் நான் இசைஞானி. எனக்கு நான் இன்னமும் இசைஞானி இல்லை. சொல்லப்போனால் எனக்கு நான் இளையராஜவே இல்லை''