தொடர்புடைய செய்திகள்
- ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு குரல் கொடுத்திருக்கும் பிரபல இசையமைப்பாளர்
- இளையராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் கைது
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தஞ்சாவூரில் தினகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்
- மீண்டும் ஒரு மெரினா போராட்டமா? தூத்துக்குடியில் செல்போன் லைட் வெளிச்சம்
- களம் காண தயார், முதல்ல உங்க துறையை சரிசெய்யுங்க: கமல்-தமிழிசை டுவிட்டரில் மோதல்
ஸ்டெர்லைட் ஆலை போராட்டம்: களத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்து வரும் நிலையில் தற்போது தூத்துக்குடி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளதால் போராட்டத்தின் தீவிரம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்துள்ளது மட்டுமின்றி இன்னொரு ஆலை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் மத்திய அரசுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வ.உ. சிதம்பரனார் கல்லூரி வாசல் முன் திரண்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி போராட்டம் செய்து வருகின்றனர். இதனை அறிந்த மற்ற கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது மிண்டும் ஒரு மெரீனா போராட்டம் போன்ற ஒரு போராட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த பிரச்சனை குறித்து மத்திய மாநில அரசுகள் இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.
