புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 25 மார்ச் 2018 (08:58 IST)

களம் காண தயார், முதல்ல உங்க துறையை சரிசெய்யுங்க: கமல்-தமிழிசை டுவிட்டரில் மோதல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் கடந்த சில நாட்களாக வலுத்து வருகிறது. தூத்துக்குடி மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் தற்போது பரவி வருகிறது. அதுமட்டுமின்றி நேற்று லண்டன் வாழ் தமிழர்கள், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இயக்குனர் வீட்டின்முன் போராட்டம் நடத்தியதால் இந்த போராட்டம் தற்போது உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவரான கமல்ஹாசன் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.என்று கூறியுள்ளார். கமலின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். போராளி என்றால் அழைக்காமல் வரவெண்டும் என்றும், அழைத்தால் வருவேன் என்று கூறுவது ஒரு தலைவனுக்கு அழகல்ல என்றும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன்-கமல். உங்களை உருவாக்கிய திரைப்பட தயாரிப்பாளர்களின் போராட்டத்தால் திரைத்துறையின் படைப்பாளிகளும் தொழிலாளர்களும் வேலையிழந்து நிற்பது உங்களுக்கு தெரியுமா.? அவர்களுடன் இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் டுவிட்டர் பெரும் பரபரப்பாகியுள்ளது.