1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (10:57 IST)

சென்னை புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி மறுப்பா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது
 
கல்லூரி மாணவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் ஹாஸ்டலில் ஒரு அறையில் ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன 
 
இந்த நிலையில் இன்று காலை இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் கல்லூரி செல்வதற்காக தயாரான நிலையில் அவர்களுக்கு புறநகர் மின்சார ரயில் மூலம் சோதனை காத்திருந்தது. சென்னையில் புறநகர் மின்சார ரயில் சரியாக இயக்கப்படாததால் கல்லூரி மாணவர்கள் பெரும் அவதிப்பட்டனர் 
 
மேலும் ஒரு சில புறநகர் ரயில்கள் மட்டுமே இயங்கும் நிலையில் கல்லூரி மாணவர்கள் ரயில்களில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கான அடையாள அட்டையை காட்டியும் புறநகர் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ரயில்வே நிலையங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனை அடுத்து மாணவர்கள் பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கல்லூரிக்கு சென்று வருகின்றனர். சமீபத்தில் புறநகர் ரயில் இயக்கப்பட்டும் அரசு ஊழியர்கள் உள்பட ஒரு சிலருக்கு மட்டுமே அந்த ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது