1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2024 (17:05 IST)

'கூல் லிப்' போதைப்பொருளுக்கு கல்லூரி மாணவர்கள் அடிமை.! ஏன் தடை செய்யக்கூடாது - நீதிமன்றம் கேள்வி.!!

Madurai Court
'கூல் லிப்' போதைப்பொருளை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவித்து ஏன் இந்தியா முழுவதும் தடை செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
 
கூல் லிப் போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, பள்ளி, கல்லூரி மாணவர்கள் ' 'கூல் லிப்' என்ற போதைப்பொருளுக்கு அதிகளவு அடிமையாகின்றனர் என்று வேதனை தெரிவித்தார்.
 
இது போன்ற போதைப்பொருளை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவித்து ஏன் இந்தியா முழுவதும் தடை செய்யக்கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் போதைப்பொருட்களால் இளம் தலைமுறையினர் சிந்திக்கும் திறன் குறைந்து வருகிறது என்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்க போதைப்பொருட்களே காரணம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

 
மேலும் கூல் லிப் தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது என குறிப்பிட்ட நீதிபதி, இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.