1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (11:43 IST)

பெரம்பலூர் அருகே பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவா் தற்கொலை : காதல் தோல்வியா?

பெரம்பலூர் அருகே பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முதல் கட்ட விசாரணையில் காதல் தோல்வி என்று கூறப்படுகிறது. 
 
பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் என்ற பகுதியை சேர்ந்த யுகேஷ் என்ற 20 வயது கல்லூரி மாணவர் அதே பகுதியைச் 15 வயது மணியரசி என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது 
 
இருவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் இரு வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்பதால் இருதரப்பு பெற்றோர்களும் இந்த காதலை ஏற்றுக் கொள்ளாமல் இருவரையும் கண்டித்ததாக தெரிகிறது 
 
இதனால் மனமுடைந்த காதலர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என்று கூறப்பட்ட நிலையில் நேற்று விவசாய கிணறு ஒன்றில் இருவரும் பிணமாக மிதப்பதாக தகவல் வந்தது 
 
இதனை அடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சம்பவம் இடத்திற்கு வந்து இரு உடல்களையும் மேலே எடுத்தபோது அவர்கள் யுகேஷ் மற்றும் மணியரசி உடல்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran