வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2024 (10:28 IST)

இரட்டை குழந்தைகளை கொன்று இந்திய தம்பதி தற்கொலை.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்..!

அமெரிக்காவை சேர்ந்த இந்திய தம்பதிகள் தங்களுடைய இரட்டை குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் கலிபோனியா மாகாணத்தில் ஆனந்த் - ஆலிஸ் தம்பதிக்கு நான்கு வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் சேர்ந்த ஆனந்த் அவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்னால் உறவினர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டதாகவும் ஆனால் மறுமுனையில் எந்த பதிலும் வரவில்லை என்பதால் சந்தேகம் அடைந்தார்.

உடனே அவர் ஆனந்தின் நண்பர்களை தொடர்பு கொண்டு உடனடியாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆனந்த வீட்டுக்கு சென்ற நண்பர்கள் கதவை தட்டியும் நீண்ட நேரமாக கதவு திறக்கவில்லை என்பதால்  சந்தேகம் அடைந்த நண்பர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஆனந்த் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் குளியலறையில் பிணமாக இருந்தனர். அது மட்டும் இன்றி படுக்கை அறையில் இரட்டை குழந்தைகளும் பிணமாக இருந்தனர்.

இது குறித்து நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் நான்கு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அமெரிக்காவில் இந்திய தம்பதிகள் தங்கள் இரட்டை குழந்தைகளை கொன்று தாங்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran