1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. College girl mistakly eaten poison

எலிக்கு வைக்கப்பட்ட விஷ கேரட்; தெரியாமல் சாப்பிட்ட மாணவி! – கோவையில் சோகம்!

Tamilnadu
கோவையில் விஷம் தடவிய கேரட்டை தெரியாமல் எடுத்து சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்த தேவசித்து என்பவரது மகள் எனிமா ஜாக்குலின். இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனக்கு பசியாக உள்ளதாக சொன்ன ஜாக்குலின் நூடுல்ஸ் செய்வதற்காக தங்களது கடையில் இருந்து பொருட்கள் எடுக்க சென்றுள்ளார்.

அங்கு எலிகளை கொல்ல விஷம் தடவி வைக்கப்பட்டிருந்த கேரட்டை விவரம் அறியாமல் மாணவி எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
வேட்பாளர் யாருக்கு சொந்தம்! ஒற்றை வேட்பாளரால் பாஜக – திமுக குழப்பம்!