செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2020 (11:14 IST)

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி.. விவகாரத்தை மறைக்க முயற்சியா?? மாணவர்கள் போராட்டம்

சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையு பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அமைந்துள்ள பெரியார் பல்கலைகழக விடுதியில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த நிவேதிதா என்ற முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். பேராசிரியரின் பாலியல் தொல்லையால் தான் மாணவி தற்கொலை செய்துக்கொண்டாதாக கூறப்படுகிறது.

சம்பவம் நடந்து ஐந்து மணி நேரத்திற்கு மேல் ஆகியும், துணை வேந்தர் வராததால், தற்கொலை விவகாரத்தை நிர்வாகம் மறைக்கப் பார்க்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.