”ஆளுங்கட்சியினர் லாபத்தை பறித்துக்கொள்கிறார்கள்”.. கமல் குற்றச்சாட்டு
ஆளுங்கட்சியினர் தொழில்முனைவோரின் 30 சதவீத லாபத்தை பறித்துக் கொள்வதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் இளம் தொழில் முனைவோருக்கான மாநாட்டில் பங்கேற்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன். அப்போது பேசிய அவர், “கல்வியை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு, மதுக்கடைகளை அரசாங்கம் நடத்தும் அவலம் நிலவுகிறது” என குற்றம் சாட்டினார்.
மேலும், “தொழில் முனைவோரின் 30 சதவீத லாபத்தை ஆளுங்கட்சியினர் பறித்துக் கொள்கிறார்கள்” எனவும் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.