செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 23 மே 2022 (10:24 IST)

தேர்வு முடியும் முன்பே Admission Open - தனியார் கல்லூரிகள் அட்ராசிட்டி!

12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. 

 
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டு என பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
 
இந்த மாதம் 31 ஆம் தேதியுடன் தேர்வுகள் முழுமையாக பொதுத்தேர்வுகள் முடிந்து விடுகின்றன. இதனிடையே நடந்த தேர்வு விடைத்தாள்கள் இடமாற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ள நிலையில் தேர்வு முடிந்தவுடன் பின்னர் ஜூன் 1 ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
ஆனால், 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. பல முன்னணி கலை அறிவியல் கல்லூரிகள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 
 
கல்லூரி கல்வி இயக்குனரகம் அட்டவணையை வெளியிடும் முன்பே, விடைத்தாள் திருத்தப்பட்டு மதிப்பெண் வரும் முன்பே தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.