வெள்ளி, 13 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (21:31 IST)

மின் விளக்குகளால் இரவில் ஜொலிக்கும் புதிய மேம்பாலம்!

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க ரூ.481 கோடி செலவில் 2018 - ம் ஆண்டு முதல் கட்டப்பட்ட மேம்பாலம் பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது.
 
கோவையில் இருந்து கேரளா செல்லும் சாலையாகவும் உக்கடம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ள பகுதியாக உள்ளது.
 
உக்கடம் முதல் கரும்புக்கடை வரை முதல் கட்டமாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து ஆத்துப் பாலம் முதல் பொள்ளாச்சி பாலக்காடு சாலைகளில் 2"வது கட்டமாக மேம்பால பணிகள் நடைபெற்று வந்தது.
 
2"ம் கட்ட மேம்பாலம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது. 
 
முதலில் மந்த நிலையில் நடந்த மேம்பால பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது.
 
தற்பொழுது மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதை ஒட்டி பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.
 
மேலும் மேம்பாலத்துக்கு மேல் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு தற்போது மேம்பாலம் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.
 
மேம்பாலத்தை திறந்து வைத்தால் போக்குவரத்து நெரிசல் இன்றி பொள்ளாச்சி, பாலக்காட்டு சாலைக்கு விரைந்து செல்லலாம் என்று வாகன ஓட்டிகளும் அப்பகுதி பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சுயிட்டு மகிழ்ச்சி அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.