1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2024 (18:15 IST)

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 53வது முறையாக தள்ளிவைப்பு.. நாளை மீண்டும் ஆஜராக உத்தரவு..!

senthil balaji
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏற்கனவே 52 முறை தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இன்று 53 வது முறையாக தள்ளி வைக்கப்பட்டு நாளை மீண்டும் ஆஜர் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் காணொளி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்ய ஆட்சேபம் இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் இருந்தும் சொல்லப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை வரை ஒத்திவைத்த நீதிபதி நாளை மீண்டும் ஆஜர் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை நேரில் அல்லது காணொளி மூலம் ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரில் ஆஜர் படுத்தப்படவில்லை என்றால் காணொளி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நாளை வரை 53வது முறையாக நீடித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணை வர இருக்கும் நிலையில் நாளை செந்தில் பாலாஜி நேரில் ஆஜர் செய்யப்படுவாரா அல்லது காணொளி மூலம் செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva