வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 8 ஜூன் 2024 (10:29 IST)

ஊருக்குள் புகுந்த காட்டு யானை - ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சம்..

கோவை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை 5க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி சென்றதால் அப்பகுதி மக்களிடையே பெரும் ஏற்படுத்தியுள்ளது.
 
கோவை மேற்கு மலை தொடர்ச்சி பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
 
குறிப்பாக யானைகள் அதிகமாக உள்ளது. இந்த யானைகள் அடிக்கடி மலையை விட்டு இறங்கி  ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. 
 
இதனிடைய நேற்று இரவு காருண்யா அடுத்த நல்லூர்வயல் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது.அப்போது அங்கு ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள், சேதப்படுத்தியது மட்டுமல்லாமல்  வாகனத்தையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.அது மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் இன்று வாழை மரங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.
 
இந்நிலையில்  ஊருக்குள் புகும் யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வனத்திற்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.