ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , செவ்வாய், 4 ஜூன் 2024 (14:57 IST)

மக்களவைத் தொகுதியில் திமுக முன்னிலை - திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...

கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், நான்காவது சுற்றில் 22389 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 
 
திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் கோவை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை வழங்கி வருகின்றனர். 
 
இதன் தொடர்ச்சியாக காந்திபுரம் அண்ணா சிலை அருகே திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
 
தொடர்ந்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.