1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2022 (10:06 IST)

உள்ளாடைக்குள் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்திய 19 வயது இளம்பெண் கைது

Gold
உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய 19 வயது பெண் கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கேரள மாநிலத்தில் உள்ள கரிப்பூர் என்ற சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை சோதனை செய்தபோது அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை கடத்தி வைத்தது தெரியவந்தது.
 
அந்த இளம்பெண் பசை வடிவில் தங்கத்தை மூன்று பாக்கெட்டுகளில் அடைத்து அதை உள்ளாடைக்குள் மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்
 
பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ஒரு கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 19 வயது இளம்பெண் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான தங்கத்தை கடத்தி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva