1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tasmac holidays of the month

இந்த மாதம் 4 நாட்கள் மதுக்கடைகள் விடுமுறை! – டாஸ்மாக் அறிவிப்பு!

Tamilnadu
தமிழகத்தில் இந்த ஜனவரி மாதத்தில் நான்கு நாட்கள் டாஸ்மாக் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளும், அரசு அனுமதி பெற்ற பார்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஜனவரியில் விடுமுறை நாட்கள் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 15 – திருவள்ளுவர் தினம், 18- வடலூர் வள்ளலார் நினைவு தினம், 26 – குடியரசு தினம் ஆகிய 3 நாட்களுக்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அரசு அனுமதி பெற்ற பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர எதிர்வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்றும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்பதால் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை நாட்களாக இருக்கும் என தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம் தகவல்!