வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (21:38 IST)

கூட்டுறவு வங்கி மாநில தலைவர் வீட்டில் பணம், தங்கம், பறிமுதல்!

தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவராக இருப்பவர் இளங்கோவன். இவரது வீட்டில் இன்று வருமான வரித்துறையின் சோதனை நடத்தினர்.

இதில், அவரது வீட்டில் இருந்து  ரூ.29 லட்சம் ரொக்கப் பணம்,21.2 கிலோ தங்கம்,. 282 கிலோ வெள்ளிப் பொருட்கள், 2 சொகுசு பேருந்த்கள், ,10 சொகுசுக் கார்கள், அவரது வங்கி கணக்குப் புத்தகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஏற்கனவே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவராக இருப்பவர் இளங்கோவன் வீட்டில் பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.